Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோழியின நோய் ஆராய்ச்சி கூடத்தில் அமைச்சர் ஆய்வு

கோழியின நோய் ஆராய்ச்சி கூடத்தில் அமைச்சர் ஆய்வு

மருந்தகங்களில் உள்ள மருந்துகளின் இருப்பு நிலை, கால்நடை மருத்துவச் சேவைகள் முறையாக வழங்கப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

பகிரவும் WhatsApp Facebook

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் மற்றும் மல்லசமுத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட கால்நடை மருந்தகங்கள், கிளை மருந்தகங்கள், இராசிபுரம் வட்டம் ஆண்டகளூர்கேட் கோழியின நோய் ஆராய்ச்சிக் கூடத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் செ.கமலி ஆய்வு மேற்கொண்டார்.

மருந்தகங்களில் உள்ள மருந்துகளின் இருப்பு நிலை, கால்நடை மருத்துவச் சேவைகள் முறையாக வழங்கப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும், கால்நடை வளர்ப்போரின் தேவைகளைக் கேட்டறிந்து, திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். கால்நடைகளுக்குத் தேவையான தீவனப்புல் வகை, பசுந்தீவன உற்பத்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாதிரிகளை அமைக்க அறிவுறுத்தினார்.

மேலும், கால்நடைகளுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசிகள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இராசிபுரம் வட்டம், ஆண்டகளூர் கேட்டில் கோழியின நோய் ஆராய்ச்சிக் கூடத்தைப் பார்வையிட்டு, நோய் கண்டறிதல், ஆராய்ச்சிப் பணிகள், நோய்க் கண்காணிப்பு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

முந்தைய செய்தி
Battery reliability, charging gaps hinder EV adoption
அடுத்த செய்தி
எழுத்தாளருக்கு ஆண்டுக்கு ரூ.3.25 கோடி சம்பளம்! ஏஐநிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

தொடர்புடைய செய்திகள்